Wednesday, November 7, 2012

சிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் உணவு விடுதி மூடப்பட்டது


கழக செயல்பாட்டுக்கு வெற்றி!



சிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் உணவு விடுதி மூடப்பட்டது
நள்ளிரவில் கடையைக் காலி செய்தனர்!
திருச்சி, நவ.7- சிறீரங்கம் ரங்கநகர் சாலையில் கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே (ஓட்டல்) என்ற பெயரில் மணிகண்டன் பார்ப்பனர்  நடத்தி வந்தார்.  திடீரென்று பிராமணாள் என்ற சொல்லை விளம்பரப் பலகையில் புகுத்தினார். அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் உள்ள பிராமணாள் என்ற பெயரை அகற்றுமாறு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மணிகண்டன் பார்ப்பனரிடம் வலி யுறுத்தப்பட்டது. மேலும் திருவரங்கம் காவல்நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத் திற்கு  அறிக்கை வெளியிட்டிருந்தார்.
காவல்துறை அனுமதி மறுப்பு
இந்நிலையில் திருவரங்கத்தில் ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடத்த கழகம் சார்பில் அனுமதி கோரியிருந்தது; ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது. மூன்று முறை தொடர்ந்து காவல் துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று கடந்த ஞாயிறன்று திருவானைக் காவலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது (4.11.2012). போராட்டம் அறிவிப்பு
அப்பொதுக் கூட்டத்தில்  பிராமணாள் ஓட் டல் பெயரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அகற்றுகின்றவரை போராட்ட நடவடிக்கையைக் கழகம் மேற்கொள்ளும். மேலும் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி இப்போராட்டத் திற்கான அறிவிப்பினை வெளியிடுவேன்  என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருவானைக் காவல் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.
நள்ளிரவில் அகற்றம்
இந்நிலையில் அந்த உணவு விடுதி கட்டடத்தின் உரிமையாளர் (பாவை டவர்ஸ்) ராஜா, மணி கண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து   நேற்று (6.11.2012) நள்ளிரவு திடீரென்று  கிருஷ் ணய்யர் பிராமணாள் கபே உணவு விடுதியை மணிகண்டன் முழுமையாக கடையை இழுத்து மூடி காலி செய்தார். பிராமணாள் கபே பெயர் பலகையும் அகற்றி எடுத்துச் சென்றார். மீண்டும் பிராமணாள் முளைத்தால்...
வேறு இடத்தில் இதே மணிகண்டன் உணவு விடுதியைத் திறந்து அதிலும் பிராமணாள் பெயரைப் புகுத்தினால், அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
சிறீரங்கத்தில் மணிகண்டன் பார்ப்பனர் நடத்தி வந்த கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே எனும் உணவு விடுதியை நேற்று (6.11.2012) நள்ளிரவு கடை உரிமையாளரே காலி செய்தார்.
கடை காலி செய்யப்பட்ட நிலையில்...


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...