Thursday, May 25, 2017

ஊழலற்றதா மோடி அரசு?

கேரள மாநில அஞ்சல் துறைப் பணியாளர்கள் தேர்வு நடைபெற்றது. கேரள மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
மலையாளத்தில் எழுதக்கூடிய இந்தத் தேர்விற்கு அரியானா மற்றும் ராஜஸ்தானிலிருந்து பெருவாரியான இளைஞர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். 
காசர்கோட் தேர்வு மய்யத்தில் வினாத்தாள் மற்றும் விடைகள் அனைத்தையும் அரியானாவைச் சேர்ந்த ஒரு மாணவர் தனது கைப்பேசியில் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்தார். 
தேர்வு எழுதும் போது அவரது போக்கில் சந்தேகமடைந்த தேர்வு மேற்பார்வையாளர் அவரது கைப்பேசியை சோதனை செய்தபோது இந்த உண்மை தெரிய வர அவர் உடனடியாக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வட இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு ஏற்கெனவே கேள்வித்தாள் கிடைத்துள்ளது. அதை வைத்து விடைகளை அவர்கள் யாரிடமோ கொடுத்து தயார் செய்து விட்டனர். 
அதை மொபைல் மூலம் பதிவேற்றம் செய்து தேர்வில் மோசடி செய்து தேர்ச்சி பெற்று விடுகின்றனர். இது சமீபகாலமாக தென் இந்தியாவில் நடைபெறுகிறது. இப்படி பிடிபட்டவர்கள்மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. 
தற்போது கைது செய்யப்பட்டவர்கள்மீது தேர்வில் முறைகேடு குற்றப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
அவர்களே எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டால் அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படும் வகையில் மிகவும் எளிதான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென் இந்திய மொழிகள் தெரியாத ஒருவரை தென் இந்தியாவின் அனைத்து மத்திய அரசுப் பணிகளுக்கும் அனுப்பும் மோசடிகள் பெருமளவில் தற்போது நடந்து வருகின்றன. இதற்கு மத்திய அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர்,
இந்த மோசடி குறித்து கேரள அஞ்சல் துறை தேர்வு அதிகாரி சிறீரங்கா என்பவரிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, இங்கு மோசடி எதுவும் நடைபெறவில்லை. 
அதேநேரத்தில் கேள்வித்தாளும், முன்பே வெளியாக வில்லை. மிகவும் கவனமாக பாதுகாப்பான முறையில் இந்த கேள்வித் தாள்கள் அச்சிடப்பட்டு தேர்வு அறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன என்று கூறினார். 
அந்த செய்தியாளர், அவரிடம் கைப்பேசியில் உள்ள கேள்விகளும் தேர்விற்கு வழங்கப்பட்ட கேள்விகளும் ஒன்றாக இருக்கிறதே என்று கேட்டதற்கு இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, விசாரணைக்குப் பிறகே இது முடிவு செய்யப்படும் என்று நழுவிவிட்டார்.
எழுத்து மூலமாக நடக்கும் தேர்விற்கு அரியானா மற்றும் ராஜஸ்தானிலிருந்து 800 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 
இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற அஞ்சலகத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. இங்கு தமிழே தெரியாத அரியானா மாணவர்கள் தமிழ் இலக் கணத்தில் முதல் மதிப்பெண் பெற்ற விவகாரம் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது. 
இதன் காரணமாக காசர்கோட் தேர்வு மய்யம் மற்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடக்கும் தேர்வு மய்யங்களில் திடீரென்று பாதுகாப்பு முறைகள் மாற்றப்பட்டன. பேனாக்கள் அனுமதிக் கப்படவில்லை. 
இந்தப் பாதுகாப்பு முறைகள் குறித்து அறிந்துகொண்டவடமாநிலத்தவர்களில்பலர்தேர்வு எழுத வராமல் தவிர்த்துவிட்டனர். 800 வட இந்தியர்களில் 300 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர்.  
இதில் 170 வட இந்திய (அரியானா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்) மாணவர்கள் காசர்கோட் அரசு கலைக் கல்லூரி மற்றும் சின்மயா கல்லூரியில் தேர்வு எழுதினர்.
 அங்குள்ள இரண்டு தேர்வு மய்யங்களில் 10 பேர் மட்டுமே கேரளத்தவர்கள் மற்றவர்கள் அனைவரும் வட இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அஞ்சல் துறைப் பணிக்கான தேர்வில் பொது அறிவு, கணக்கு, ஆங்கிலம் மற்றும் தமிழ்த் தேர்வுகள் நடைபெற்றன. அப்போது தமிழ் மொழிப் பாடத்தேர்வில் அரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழ்ப் பாடத்தில் அரியானாவைச் சேர்ந்த மாணவர் தினேஷ் 25-க்கு 24 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ராகுல் என்ற அரியானாவைச் சேர்ந்தவர்தான் இரண்டாம் இடம். இவர் எடுத்தது 22 மதிப்பெண்கள்.  
இந்தத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மதுரையைச் சேர்ந்த மாண வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பணிக்காக தேர்வு செய்யும் அடுத்த நடைமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வகையில் இந்தி பேசாத மாநிலங்களில் அரசுத் துறையில் இந்தி பேசும் மக்களை வலுக்கட்டாயமாக திணிக்கும் பணியில் மோடி அரசே முன்னின்று மோசடியில் ஈடு பட்டு வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.
ஊழலில் மிகப்பெரிய ஊழல் பி.ஜே.பி. ஆளும் மத்திய பிரதேச வியாபம் ஊழல் - மருத்துவக் கல்லூரி ஊழல் - முதலமைச்சரின் மனைவிவரை சம்பந்தப்பட்ட ஊழல் அது. தற்கொலைகளும் ஏராளம் - ஆளுநர் மகன் உள்பட. இந்த லட்சணத்தில் பி.ஜே.பி. உத்தமப் புத்திரன் வேடம் போடுவதுதான் வேடிக்கை.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...